திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்தநாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல்(50). தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை சேர்ந்த வையப்பனை(55). வேலைக்கு நியமித்தார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 23 ல் வையப்பனிடம் தகராறு செய்த சக்திவேல் சுத்தியலால் அடித்து கொன்றார்.போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பழநியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி மலர்விழி அவர்கள், சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா