திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு பொன்னாக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் (48). என்பவருக்கும் அவரது சகோதரர் மகன் இசக்கி முத்துக்கும் (28). இடையே பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பான பிரச்சனையில், அருணாச்சலத்தை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இது குறித்து அருணாச்சலத்தின் மகள் செல்வவேனி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், சுரேஷ் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்து, மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த அவரது தாய் சுப்புலட்சுமி (50). இருவரையும் (29.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்