திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கண்ணன் குளம், ஈத்தங்காடு கடற்கரை அருகில் (07.12.2024) அன்று வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக பழவூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், பணகுடி காவல் ஆய்வாளர், அஜுகுமார் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டதில், இறந்து நபர் கன்னியாகுமரி மாவட்டம், செட்டிவிளை சாமி தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற முயல் கண்ணன் (29). என்பதும், ராஜ்குமாரை கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், வடக்கு கரும்பத்தூரை சேர்ந்த அகல்யா(24). தேரிவிளை, ஹரிகர சுதன்(28). தாமரைகுளம், சுதிர்(26). மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி காவல் ஆய்வாளர் அவர்கள் மூன்று பேரையும் (10.12.2024) அன்று கைது செய்து சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்