தூத்துக்குடி: கடந்த (01.08.2025) அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன் தமிழ்செல்வன் (42). என்பவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் (02.09.2025) ஏரல் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.