திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு இன்னாசியம்மாள் (85). என்பவரின் வீட்டில் திருட முயன்று அவரை கொலை செய்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (எ) பாஸ்கர ரமேஷ் (34). என்பவரை அம்மையநாயக்கனூர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர்.குமரேசன், நீதிமன்ற தலைமைக் காவலர். செல்வகனி மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதி சீரிய முயற்சியால் அன்று (27.10.2023)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ரமேஷ் (எ) பாஸ்கர ரமேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா