திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி (60). என்பவரின் வீட்டில் வேலை செய்து அவரது பணம் மற்றும் நகைகளை திருடி அவரை கொலை செய்த வழக்கில் வடமதுரை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (40). என்பவரை வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்.பாலமுருகன், நீதிமன்ற தலைமைக் காவலர்.ஆரோக்கிய சவரியம்மாள் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதி சீரிய முயற்சியால் (05.01.2024)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி பெரியசாமி என்பவருக்கு ஆயுள் ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா