திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தரேவு பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அலாவுதீன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த சலீம்(35). என்பவர் உட்பட 06 நபர்களை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்.குருவத்தாய், நீதிமன்ற தலைமைக் காவலர்.பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு வழக்கறிஞர்.சூசை ராபர்ட் அவர்களின், சீரிய முயற்சியால் (31.10.2023)-ம் தேதி திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், முதல் குற்றவாளி உயிரிழந்த நிலையில் இரண்டாம், மூன்றாம் குற்றவாளியான குத்புதீன்(33). மற்றும் அப்பாஸ்(45). ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா