திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக /ராஜேஷ்குமார்(32). மனைவி கிருத்திகா(22). ஆகிய 2 பேரை வடமதுரை போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன், அறிவுறுத்தலின் பேரில்டி எ.ஸ்.பி.துர்காதேவி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீதிபதி அவர்கள், ராஜேஷ் குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா