திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒத்தக்கடை இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ் (எ) செல்வம் (35), என்பவரை நிலதகராறு காரணமாக அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி (38), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார் இவ்வழக்கில் துரைப்பாண்டியை எரியோடு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி எரியோடு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமதி.ஜெயராணி அவர்கள் நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திருமதி.கலாராணிமற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் 31.01.2023-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி துரைபாண்டிக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.10,000/- அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா