திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் (31) என்பவரை கடந்த (08.10.2022) ம் தேதி தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மர்ம கும்பல் கொலை செய்து வீசி சென்றனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய 6 நபர்களை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்கி (எ) விக்னேஷ்(23) மைதிலி நாதன் (19), பிரேம்குமார் (24)ஆகிய 3 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் விக்கி (எ) விக்னேஷ், மைதிலி நாதன், பிரேம்குமார் ஆகிய 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா