திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் வருடம் ராஜாஜி ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து 75. என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது மகன் மணிகண்டன் 40. என்பவரை பழனி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்கள் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.உமா மகேஸ்வரி மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 24.11.2022-ம் தேதி பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ10,000/- அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா