திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார்(42). சக்திவேல்(47). மற்றும் அன்புராஜ்(38). ஆகிய மூன்று நபர்களையும் தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.சாந்தி
அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் (19.07.2024)- ம் தேதி திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் அசோக்குமார்,சக்திவேல் மற்றும் அன்புராஜ் ஆகிய 03 நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா