திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த தோமையார்(எ) சின்னத்தம்பி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சூர்யாஆப்ரஹாம்(20). சிவா (எ) ஆரோக்கிய ரோஸி(29). சிவசங்கர்(20). விஜய் ஆதித்யா(20). மேயர்முத்து(31). ஆகிய 5 பேரை பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த 5 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















