திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.02.2022 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி திருநெல்வேலி: அவர்கள் குற்றவாளி ஜான் ஜோசப் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்ததற்காக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான வி.கே.புரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி மற்றும் வழக்கின் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தலைமை காவலர் திரு. முத்துக்குமார், முதல்நிலைக் காவலர் மற்றும் திரு.திவான் ஷா ஷேக் பரித் ஆகியோரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.