திருநெல்வேலி: சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழக்கருவநல்லூர், நடுத்தெருவை சேர்ந்த சுரேஷ்(40). என்பவருக்கும் அவருடைய அண்ணனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. (15.01.2020) அன்று சுரேஷ் அவரது அண்ணனை ஜாடையாக பேசியதை சுரேஷின் மனைவியான ஜெயா சத்தம் போட்டதற்கு அவரை அவதூறாக பேசி உள்ளார். பின் ஜெயா வீட்டில் படுத்து இருந்த போது அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜெயா அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது குறித்து சீதபற்பநல்லூர் காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (11.06.2024) இன்று விசாரித்த திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. பன்னீர்செல்வம் (பொறுப்பு) அவர்கள் குற்றவாளியான சுரேஷிற்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்த சீதபற்பநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.