தென்காசி : தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கின் முக்கிய சாட்சியான ஹரிஹரன் என்பரை 2017 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு.மனோஜ் குமார் அவர்கள் குற்றவாளிகளான கற்குடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிங்காரவேலு என்பவரின் மகன் சங்கிலி (55). மற்றும் கற்குடி மெயின் ரோட்டை சேர்ந்த ஹனிபா என்பவரின் மகன் நவாஸ் கான்(31). ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த புளியரை காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.