திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவர் வைகுண்டம். இவர், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்நிலையில், (10.3.2022) அன்று அங்குள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்விட்டு தப்பினர். பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ், அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன், தேவதாஸின் மனைவி ஜாக்குலின், அவரது மகன்களான பிலிப், அன்டோ, திரவியம் மகன் பாபு அலெக்சாண்டர் , கோவில்பிச்சை மகன் ராஜன், ராஜன் மனைவி லீலா ஆகியோரை கைது செய்தனர் .
திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வராஜுக்கு மரண தண்டனையும், அந்தோணி பிரபாகர் , அருள் பிலிப், அண்டோ நல்லையா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ராஜன், லீலா, ஜாக்குலின் ஆகிய மூவருக்கும் இரண்டு மாதம் சிறை தண்டனையுடன் தலா ரூ.5000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தாழையூத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, மற்றும் பாளையங்கோட்டை தாலுகா போலீசாரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N. சிலம்பரசன் , இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்