திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய வடுவூர் பட்டி சங்கர சுப்பிரமணியன் கொலை வழக்கில் குற்றவாளிகளான கொத்தன்குளம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற ராஜா 20, பாண்டி என்ற பாண்டியன் என்ற சீயான் பாண்டியன் 31, பிரபாகரன் 26,
திருநெல்வேலி டவுன் பாறையடி பகுதியைச் சேர்ந்த மகன் சீதா ராமகிருஷ்ணன் 24.ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முன்னீர்பள்ளம், காவல் ஆய்வாளர், திரு. சுரேஷ்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில்,
மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.