திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளிகளான பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம், அதிசய விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் சுடலைகண்ணு என்ற கண்ணன் 35. மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் சிவன் என்ற சிவனு 51. ஆகிய இருவரும் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவந்திபட்டி, காவல் ஆய்வாளர், திருமதி. சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில்,
மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 11.11.2021 இன்று குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.