திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளியான திருநெல்வேலி வட்டம், தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் மணி என்ற எஸ்டேட் மணி 39 என்பவர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர், காவல் ஆய்வாளர், திரு. ராமர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றவாளி.