மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ம் வருடம் தாக்கலான குற்ற எண் 242/22 u/s 147, 148, 149. 120(b), 302 IPC r/w 3(1)(r), 3(1)(s), 3(2)(v) SC/ST Act குற்றவாளிகள் 1. சூரியா என்ற சூரிய பிரகாஷ் (24). (SC/PR), த/பெ செல்வம், கல்வேலிபட்டி, 2. நவீள்குமார் (25). த/பெ செல்வம், கல்வேலிபட்டி 3. கண்ணன் (22). த/பெ செக்கதுரை, வயலூர், 4. முத்துராஜா (20). த/பெ முத்துமுருகன், வயலூர் 5. சிலம்பரசன், த/பெ நாகராஜ், சின்ன இலந்தைக்குளம் ஆகியோர்களுக்கு எதிராக மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமதி. N.நாகலெட்சுமி, MA BL அவர்கள் மேற்படி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட A1 முதல் A5 வரையிலான அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். அதன்பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தருவதற்கு உதவியாக நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. பாலசுந்தரம், நீதிமன்ற முதல் நிலை காவலர் திரு.பாலமுருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்