திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், கடந்த (28.11.2025) அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31/25). என்பவர் இரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் கிடைக்க பெற்ற, பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி மரணத்திற்கான காரணத்தினை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தலைமையில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜசேகர் (29). முன்விரோதம் காரணமாக குமரேசனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு சிறு தடயங்களும் இல்லாத நிலையில், சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடனும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திறமையான விசாரணை மூலம் கொலையாளி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், காவல் ஆய்வாளர் சண்முகவேல், மற்றும் காவலர்களை திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., வெருவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















