திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பஜாரில் மாவு மில் மற்றும் டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் ராமநாதன் @ ராம்குமார் (48). இவருக்கும் அதே பகுதியில் கோழி கடை நடத்தி வரும் செல்வமணிகண்டன் என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. சம்பவத்தன்று செல்வமணிகண்டன் நண்பரான கௌதம் என்பவர் ராமநாதன் (எ) ராம்குமாரின் கடைக்கு வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதாக கூறி ராம்குமாரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.
அவர் வீடு திரும்பாததால் தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவின் பேரில், விசாரித்ததில் ராமநாதன் (எ) ராம்குமார் குற்றாலம் பராசக்தி நகரில் உள்ள தனியார் விடுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் காவல் துறையினர் சென்று பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக குற்றாலம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வமணிகண்டன்,(30). கௌதம்,(22). மற்றும் (17 ).வயது இளஞ்சிறார் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















