திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு தரப்பினர் இடையே நிலப்பிரச்சனை தொடர்பான விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள் சாமி (29/14). என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,
நீதிமன்றம் குற்றவாளிகளான ராஜாபாபு (35/14). முருகன் (50/14). ஆகிய இருவருக்கும் (24.09.2025) அன்று ஆயுள் தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் பாலமுருகன், (தற்போது மதுரை மாநகரம்) மற்றும் மானூர் காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். மாவட்ட காவல் துறையால் நிகழாண்டில் இதுவரை 20 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 66 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 21 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்