இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் மணிவண்ணன் மற்றும் பிருத்திவிராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.