தூத்துக்குடி: கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கோமதி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மணக்கரையைச் சேர்ந்த கோமதி மற்றும் அவரது கணவரான சுப்பையா மகன் ராஜேந்திரன், ராஜேந்திரன் சகோதரர்களான அன்பு என்ற அங்கப்பன், துரை, கணேசன், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையா மகன்களான நடராஜன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மகன் செந்தூர், முத்துராமலிங்கம் மகன் சங்கர் மற்றும் முருகேசன், நம்பிராஜன் என்ற நடராஜன் மகன்கள் ராமன், சங்கர், குப்பக்குறிச்சியை சேர்ந்த குமார் என்ற தங்க பழனிக்குமார்,
பார்வதி மகன்கள் கணேசன் மற்றும் வேல்முருகன், துரைபாண்டி மகன் சுப்பு, மகேஷ், மந்திரம், மாரியப்பன், ராஜா, மற்றும் சிலர் சேர்ந்து சுடலைமுத்துவின் வீட்டிற்கு சென்று அவரது உறவினரான ஆழிகுடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (60), முருகையா மகன் சிவராமன் (37), கணபதி மகன் முண்டசாமி (30), அர்சுனன் மகன் மகாராஜன் (35) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் சுடலைமுத்துவின் வீட்டிலிருந்த டிவி, மேசை, சேர், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுடலைமுத்து அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் தேவசகாயம் மற்றும் காவலர்கள் அடங்கிய போலீசார் மேற்படி வழக்கில் ஈடுபட்ட எதிரிகளான முத்துராமலிங்கம் மகன் முருகேசன் (32), நம்பிராஜன் என்ற நடராஜன் மகன் ராமன் (30), பார்வதி மகன் வேல்முருகன் (24) மற்றும் துரைப்பாண்டி மகன் மகேஷ் (36) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.