திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், இவருக்கும், பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரரான ஆறுமுகம் என்ற சீனி என்பவர் குடும்பத்துக்கும் வரப்பு தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த (11.11.2021)இல் முத்துக்குமார், அவரது மகன் வெள்ளத்துரை ஆகியோர் வயலை பார்வையிடுவதற்காகச் சென்றபோது பக்கத்து வயல் உரிமையாளரான ஆறுமுகம் என்ற சீனி என்பவரின் மகன்கள் சேர்மத்துரை, ராஜசேகர் ஆகியோருக்கும் இடையே வரப்பு தகராறு முற்றிய நிலையில் சேர்மத்துரை, ராஜசேகர் ஆகிய இருவரும் அறிவாளால் முத்துக்குமார், அவரது மகன் வெள்ளத்துரை ஆகிய இருவரையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நான்குனேரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் (11.11.2025) செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்ட சேர்மத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















