மயிலாடுதுறை: (01.04.2024) மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். செம்பனார்கோவில் காவல் சரகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கொலை வழக்கில் இறந்துபோன இராஜேந்திரன் என்பவரது மனைவி திருமதி. ஜோதி, மகள் செல்வி. சக்திபிரியா, மகன் திரு. கணேஷ் மற்றும் அவரது தாயார் திருமதி. அமுதா ஆகியோருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ரூபாய்.3,50,000/- குத்தாலம் காவல் சரகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கொலை வழக்கில் இறந்து போன மோகன் என்பவரது மனைவி திருமதி. ஷகிலா மற்றும் அவரது மகள் செல்வி. அபிநயா ஆகியோர்களுக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ரூபாய்.3,00,000/- 3. சீர்காழி காவல் சரகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்ட திரு. கரிகாலன் என்பவருக்கு நிவாரண நிதியாக ரூபாய்.50,000/-மும் வழங்கப்பட்டது.