கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பல கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சசிகுமார் வயது (31). த/பெ மாரியப்பா, அம்பேத்கர் காலனி, அத்திபள்ளி கிராமம், ஆனேக்கல் தாலுக்கா, பெங்களூர் மாநிலம் என்பவர் கடந்த 2023 ஆம் வரு டம் ஓசூரில் இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்டும். கர்நாடக மாநிலத்தில் குற்றவாளியாகவும் இருந்தவர், சிப்காட் காவல் நிலைய எல்லை பேடரப்பள்ளியில் கடந்த (24.12.2024) ந் தேதி கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்டதால், ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் சிப்காட் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தங்கதுரை அவர்களின் பரிந்துரை பெற்றும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சசிகுமார் என்ற நபரை ஒரு வருடம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்