தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியை சேர்ந்த பொன்பாண்டியன் மகன் சிவப்பிரகாஷ் (21). மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (25). ஆகிய இருவரையும் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.