திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (35). மற்றும் நித்தியா (33). என்பவர்கள் அறிவாளால் வெட்டியும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் இரண்டு நபர்களை விருவீடு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்., இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி விளாம்பட்டி சரக காவல் நிலைய ஆய்வாளர்.ஷர்மிளா, நீதிமன்ற முதல்நிலை காவலர்.கோமதி மற்றும் அரசு வழக்கறிஞர்.குமரேசனது சீரிய முயற்சியால் திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகள் ராஜேஷ் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதமும் நித்தியா என்பவருக்கு 15 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா