இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய குற்ற எண் 76/2015 U/s 307 IPC கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் என்பவருக்கு இராமநாதபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.அகிலாதேவி அவர்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி