திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஏர்மாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த சேட்(47). என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு கீழ ஏர்மாள்புரத்தை சேர்ந்த சங்கர பாண்டி(42). சண்முகசுந்தரம் (39). ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சேட் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கில் இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தென்காசி தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (21.01.2025)-ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பாக நீதிமன்றம் சங்கர பாண்டி, சண்முகசுந்தரம் ஆகிய இருவருக்கும் 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 16,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்