கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் ரஞ்சன் குமார் என்பவர் கார்கொண்டபள்ளியில் உள்ள கன்செக்சன் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (01.02.2024) ஆம் தேதி இரவு சுமார் 9.45 மணிக்கு கன்செக்சன் சைட்டில் வேலை முடித்து தன்னுடன் வேலை செய்யும் இன்ஜினியர் வீரமணியை தன் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு கார்கொண்டப்பள்ளி JN சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டில் கற்களை வைத்திருந்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது அடையாளம் தெரிந்த நான்கு நபர்கள் கையில் இரும்பு ராடு மற்றும் கட்டைகளை வைத்துக்கொண்டு தங்களின் அருகே வந்தபோது பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த வீரமணி இறங்கி ஓடிவிட்டதாகவும் தன்னை ஒருவன் கட்டையால் அடித்ததாகவும், தான் செல்போன் மூலம் கம்பெனிக்கு தகவல் தெரிவித்து வேலை செய்யும் ஆட்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியை தேடி பார்த்ததில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் சிறிது தூரத்தில் கீழே மயங்கி விழுந்து கிடந்தவரை மீட்டு ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு கெலமங்கலம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் கொலை முயற்சி செய்த நான்கு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்