தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பிரேமானந்தன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம், அகஸ்தேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வமுருகன் (எ) செல்வம் (34), என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளி செல்வமுருகன் (எ) செல்வம் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி செல்வமுருகன் (எ) செல்வம் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிநகர், தெற்கு தாமரைக்குளம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.