திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30). இவர் பன்றி கறிக்கடை நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31 )-க்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன்(42). ஈஸ்வரன்(43). பாஸ்கரன்(25). மோகனமூர்த்தி(21). ஆனந்த்(24). பிரகாஷ்(26). ஆகிய 6 பேர் ஜீவாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். படுகாயம் அடைந்த ஜீவா சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா