திருநெல்வேலி: திருநெல்வேலி, மானூர், சேதுராயன் புதூரை சேர்ந்தவர் மனோகரன்.(24). இவருக்கும் கம்மாளங்குளத்தை சேர்ந்த சுரேஷ் (23). என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் (17.11.2024) அன்று மனோகர் அவரது நண்பர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான சுடலைமணி(28). முப்புடாதி(19). பிரகாஷ்(23). ஆகியோர் அருவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மனோகரன் மானூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சுடலைமணி, முப்புடாதி, பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் (18.11.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்