திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (39). இவர் (07.03.26) அன்று கார்த்திகேயன் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, இதில் தொடர்புடைய பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் (30). தியாகராஜநகரைச் சேர்ந்த தினேஷ் பாஸ்கர் (29). கணேஷ்குமார் (31). ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















