திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே (17.04.2025) அன்று மறவர் தெருவை சேர்ந்த மரியதேவசகாய மகன் செல்வ கணேஷ் குமார்(37). என்பவரை முருகன் குறிச்சியில் உள்ள பேராட்சி செல்வி அம்மன் கோயில் இடப்பிரச்சனை தொடர்பாக மாரிசிதம்பரம், சிவா என்ற ஐயப்பன், சங்கரன் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் வழிமறித்து தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தி அவருடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் செல்வகணேஷ் குமார் (18.04.2025) அன்று கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்