திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (39). க்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து ராஜா (42). க்கும், இடையே சொத்து பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் (01.03.2025) அன்று சுப்பிரமணியன் தனது தோடடத்திற்கு சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கி முத்துராஜா மற்றும் சிலர் சுப்ரமணியனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து சுப்பிரமணியன் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பணகுடி காவல் ஆய்வாளர், ராஜாராம் வழக்குப்பதிந்து இசக்கி முத்து ராஜாவை (02.03.2025) அன்று கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்