திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கட்டளை புதுத் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (45). சசிகலா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது அண்ணன் கிருஷ்ணன் (53). வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் (31.01.2025) அன்று ஆனந்தராஜ் கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிருஷ்ணன் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஏர்வாடி வட்ட காவல் ஆய்வாளர், சுதா வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை (01.02.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்