திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் டவுன் மாதாபூங்கோடி தெருவில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் செண்பககுமாருக்கும், தடிவிரன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகராஜாவுக்கும்(24). இடையே உள்ள முன் விரோதம் காரணமாக (25.12.2024) ஆம் தேதி இரவு செண்பககுமார் வீட்டிற்கு வந்த சண்முகராஜா பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து வீட்டின் முன்பு வீசி கொலை மிரட்டல் விடுத்ததாக செண்பகப் குமார் அளித்த புகாரின் பேரில் டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சண்முகராஜாவை (24). கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்