திருநெல்வேலி: திருநெல்வேலி, தருவை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கிட்டு,(46). முருகம்மாள் தம்பதியினர். குடும்ப பிரச்சினை காரணமாக முருகம்மாள் தனது கணவரை பிரிந்து பொன்னா குளத்தில் உள்ள தனது சகோதரர் கண்ணன்,(57). வீட்டில் இருந்து வருகிறார். (22.11.2024) அன்று பொன்னா குளத்திற்கு வந்த கிட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்ததற்கு கண்ணன் மறுத்து கிட்டுவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிட்டு மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்