திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு தங்கம்மன் கோவில் தெரு அருகே (01.11.2024)-ஆம் தேதி சென்று கொண்டிருந்த C.N கிராமத்தை சேர்ந்த மணிகுட்டி மகன் ரகு(27). என்பவரை டவுன், டிஎம்சி காலனியை சேர்ந்த விஜய்(28). தென்காசி, குருவன்கோட்டை சேர்ந்த சப்பானிராஜ்(22). கல்யாணகுமார்(21). இசக்கிமுத்து (19). ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து கையில் வைத்திருந்த கம்பு மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மது அருந்த பணம் கேட்டு மிரட்டி, தர மறுத்த காரணத்தினால் அவரை கீழே தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சந்திப்பு காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்