திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனந்தல், வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாருக்கும் (37) அவருடைய மனைவி கோமதிக்கும் (34). இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் (09.02.2025) அன்று காலை கோமதி வீட்டிற்கு வந்த செல்வகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து கோமதியிடம் தகராறில் ஈடுபட்டு அருவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து கோமதி தேவர்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்