திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறை சுடலை கோவில் முன்பு (20.11.2024) அன்று சுத்தமல்லியை சேர்ந்த முத்துக்குமார்(45). நின்று கொண்டிருந்த போது அங்கே வந்த சந்திப்பு கீழ ரதவீதியைச் சேர்ந்த சக்தி ஆனந்தன் மகன் நயினார் செல்வராஜ்(29). என்பவர் மது அருந்த பணம் கேட்டு முத்துக்குமார் பணம் தர மறுத்த காரணத்தினால் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின் பேரிலும், திருநெல்வேலி டவுன் பாபா தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (27). என்பவர் (20 .11. 2024) அன்று டவுண் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பகத்சிங் தெருவை சேர்ந்த சீனிவாசன் (24). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அறிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இரு வேறு புகாரின் படி சந்திப்பு மற்றும் டவுண் காவல் நிலையங்களில் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்