தூத்துக்குடி: கடந்த (06.08.2025) அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஹரிசிங் (25). மற்றும் கடந்த (11.08.2025) அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான சிவபெருமாள் மகன் தங்ககுமார் (23). ஆகிய இருவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் (07.09.2025) புதுக்கோட்டை மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 97 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.