திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல். (27). இவருக்கும் தம்புபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (43). என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ள நிலையில் (19.11.2024) அன்று வடிவேல் தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த லட்சுமணன் வடிவேலிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி அருவாளால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து வடிவேல் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், பார்த்திபன் வழக்கு பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்