திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் மகன் மணிகண்டன் (24). இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் சாட்சி சொல்லக்கூடாது எனக் கூறி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சந்திப்பு காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். திருநெல்வேலி 4-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















