இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய பகுதியில் இடத்தகராறில் அடைக்கல சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவருக்கு இராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.மோகன்ராம் அவர்கள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.